லண்டனில் பயங்கரவாத செயல்களுக்கு உதவிய வாலிபர் கைது

பிரிட்டனில் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லண்டனில் பயங்கரவாத செயல்களுக்கு உதவிய வாலிபர் கைது
Published on

லண்டன்:

பிரிட்டன் நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாத வகையில் அங்குள்ள பயங்கரவாத் தடுப்பு பிரிவு போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு லண்டனில் வசித்து வந்த 27 வயதான வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து,  பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 24 வயது பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கிருந்து மேலும் 3 முகவரிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com