இந்தியாவிற்கு வரும் பிரிட்டன் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுரை

அரியானா சாமியாருக்கு எதிரான தீர்ப்பை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையை அடுத்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுரை கூறியுள்ளது.
இந்தியாவிற்கு வரும் பிரிட்டன் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுரை
Published on


லண்டன்:

அரியானா மாநிலத்தின் சினிமா சாமியாரான குர்மீத் ராம் ரஹிம் சிங் தன் ஆசிரமத்தில் உள்ள இரண்டு சிறுமிகளை கற்பழித்ததாக நடைபெற்று வந்த விசாரணையில் நேற்று அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் வன்முறை வெடித்துள்ளது. அரியானா - பஞ்சாப் மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 குர்மீத் ராம் ரஹிம் சிங் 

இதைத்தொடர்ந்து, வரும் 28-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட இருப்பதால் கலவரங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்தியாவிற்கு பயணம் செய்யும் பிரட்டன்வாசிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுருத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com