உடுமலை அருகே சைக்கிள் மீது வேன் மோதி மில் தொழிலாளி பலி

உடுமலை அருகே சைக்கிள் மீது வேன் மோதி மில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள முக்கோணம் பகுதியை சேர்ந்தவர் வெங்கிடுசாமி(வயது60). இவர் கூலாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு சைக்கிளில் பொள்ளாச்சி ரோட்டில் உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வேன் ஒன்று சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கிடுசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய ஆம்னி வேன் டிரைவரான முரளிதரன்(32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com