மீண்டும் லாக்டவுனை சந்திக்க நேரிடும்: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

தற்போதுள்ள கட்டுப்பாடுகளை மதிக்காவிடில், லாக்டவுன் கடுமையாக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
Published on

நாடு தழுவிய 5-வது கட்ட ஊரடங்கு ஜூன் 1-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி ஒவ்வொரு மாநிலங்களும் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்தியாவில் மிக அதிக அளவு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திலும் நேற்று முன்தினத்தில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் சகஜமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலான இடங்களில் மக்கள் மிகப்பெரிய அளவில் கூடுவதை காண முடிகிறது. இது கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்று தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, தற்போதுள்ள கட்டுப்பாடுகளை மதிக்காவிடில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்த வேண்டியது நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில் ‘‘உள்ளூர் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மும்பையில் மருத்துவமனை ஸ்டாஃப்கள், அத்தியாவசிய பணிகளை செய்யும் ஊழியர்கள் அவசரமாக பயணம் செய்ய மிகக் கடினமான சூழ்நிலை உள்ளது. அவர்கள் வேலை குறித்த தகவல்களை கூட தெரிவிக்கக் முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற தொழிலாளர்களுக்காக உள்ளூர் ரெயில் சேவையை இயக்குவது முக்கியமானது.

பல்வேறு தளர்வுகளுடன் லாக்டவுன் ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தளர்வுக்குப் பிறகு மக்கள் சில இடங்களில் மிகப்பெரிய அளவில் கூடியதை நம்மால் பார்க்க முடிகிறது. மகாராஷ்டிரா மக்கள் அரசுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். ஆனால்,  கட்டுப்பாடு மீறல்கள் எங்களை மீண்டும் லாக்டவுனை அமல்படுத்த தள்ளப்பட வைக்கிறது’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com