உடையார்பாளையம் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

உடையார்பாளையம் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர் தாக்குதல்
ஆட்டோ டிரைவர் தாக்குதல்
Published on

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை(வயது 62). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தான் வளர்த்து வரும் கோழிகளை காணவில்லை என அப்பகுதிகளில் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் லோகநாதன் மகன் கார்த்திக்(23), குமார் மகன் தேவராஜ்(19) ஆகிய 2 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக பிச்சைபிள்ளையை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பிச்சைபிள்ளை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com