ஜம்மு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அன்ந்த்நாக் மாவட்டத்துக்கு உட்பட்ட காசிகண்ட் பகுதியில் இன்று மாலை பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற வாகன அணீவகுப்பின் மீது போனிகாம் என்ற இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அங்கு இருதரப்பினருக்கும் இடையில் மோதல் நடந்து வருவதாக ஜம்முவில் இருந்து வெளியாகும் ராணுவ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.