கள்ளக்குறிச்சி அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரங்கநாதபுரம் சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக கையில் நாட்டுத்துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தோமிணிக்(வயது 27), ஜான்பீட்டர்(39) என்பதும், அவர்கள் அனுமதியின்றி 2 நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து தோமிணிக், ஜான்பீட்டர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com