இரட்டை இலை சின்னம் விவகாரம்: சசிகலா அணி கூடுதல் ஆவணங்கள் தாக்கல்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சசிகலா அணி சார்பில் தேர்தல் கமி‌ஷனில் இன்று கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 70 ஆயிரம் பக்க பிரமாண பத்திரத்தை அமைச்சர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் தாக்கல் செய்தனர்.
இரட்டை இலை சின்னம் விவகாரம்: சசிகலா அணி கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
Published on

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு 2 அணிகளாக செயல்படுவதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

இதையடுத்து 2 அணிகளும் தேர்தல் கமி‌ஷனில் தங்கள் பக்கம் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளன.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணியினரும் இரு கட்டங்களாக ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தன.

நேற்று ஓ.பி.எஸ். அணி சார்பில் 3-வது முறையாக கூடுதல் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 20 லட்சம் பக்கங்களை கொண்டது.


இந்த நிலையில் சசிகலா அணி சார்பில் தேர்தல் கமி‌ஷனில் இன்று 3-வது முறையாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. 70 ஆயிரம் பக்க பிரமாண பத்திரத்தை அமைச்சர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் தாக்கல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com