மதுரை அருகே கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்

மதுரை அருகே மாயமான கல்லூரி மாணவிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கல்லூரி மாணவிகள் மாயம்
கல்லூரி மாணவிகள் மாயம்
Published on

மதுரை:

மதுரை அருகே உள்ள ஆலாந்தூர் அன்னை மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் சவுமியா (வயது 22). மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் சவுமியா 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

மகள் மாயமானது குறித்து வெங்கடேசன் ஊமச்சிக்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்...

மதுரை அருகே உள்ள சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகள் தனலட்சுமி (20). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் மதுரையில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் அரசு போட்டித்தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று வந்தார். நேற்று முன்தினம் வகுப்புக்கு சென்ற தனலட்சுமி வீடு திரும்பவில்லை.

இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com