ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டையில் 12 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்  ராணுவத்தினர்
ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர்
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்களையும் அரசையும் அச்சுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆப்கன் ராணுவம் பதிலடி  கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், பயங்கரவாதிகளை குறிவைத்து நேற்று இரவு ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 12 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சாபுல் மாகானத்தில் உள்ள மிசானா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.

இதே போல், நேற்று இரவு உருஸ்கன் மாகாணத்தின் காஸ் மாவட்டத்திலும் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரவாதிகள் அனைவரும் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com