ஆப்ரின் நகரை கைப்பற்றியது துருக்கி- குர்திஷ் போராளிகள் விரட்டியடிப்பு

சிரியா நாட்டில் குர்திஷ் போராளிகளின் மையப்பகுதியாக திகழ்ந்த ஆப்ரின் நகரை கைப்பற்றி விட்டதாக துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் அறிவித்துள்ளார். #savesyria #turkey #afrin
ஆப்ரின் நகரை கைப்பற்றியது துருக்கி- குர்திஷ் போராளிகள் விரட்டியடிப்பு
Published on

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆப்ரின் நகரை மீட்க கடந்த 2 மாதங்களாக துருக்கி தலைமையிலான படையும், சிரியா கிளர்ச்சி படையும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரம் குர்தீஷ் போராளின் முக்கிய பகுதியாக செயல்பட்டு வந்தது. கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையை குறிவைத்து துருக்கியின் விமான படையினர் நடத்திய தாக்குதலில் 9 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.


இந்நிலையில், ஆப்ரின் நகரை துருக்கி ராணுவம் முழுமையாக கைப்பற்றி விட்டதாக துருக்கி ஜனாதிபதி ரெசிப் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். அந்நகரில் இருந்த குர்தீஷ் போராளிகளை விரட்டியடித்து விட்டு துருக்கி நாட்டு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. குர்தீஷ் போராளிகளிடமிருந்த அந்நகரம் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்நகரில் உள்ள குர்தீஷ் போராளி ஒருவரின் சிலையையும் துருக்கி படையினர் தகர்த்தெறிந்தனர். #savesyria #turkey #afrin #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com