ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: தினகரன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆதரவாளர்களுடன் டி.டி.வி. தினகரன் இன்று பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: தினகரன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் போட்டியிடுவேன் என்று டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் களம் இறங்கிய டி.டி.வி.தினகரன் தற்போது கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டார்.

அ.தி.மு.க. அம்மா அணியாக இதுவரையில் செயல்பட்ட தினகரன் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ். அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை தொடர்ந்து அ.தி.மு.க. கட்சி பெயரையும், அலுவலகத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேதியும், உடனடியாக அறிவிக்கப்பட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் டி.டி.வி. தினகரன் இன்று பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தினார்.


பி.வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்லன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினார்கள். ஆர்.கே.நகர் தொகுதி நிர்வாகிகள், பகுதி, வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பெண்களும், அவரது வீட்டு முன்பு கூடினார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பது, தேர்தல் பிரசாரம் செய்தால் எதிர் அணியில் உள்ளவர்களை எப்படி எதிர்த்து பிரசாரம் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com