ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய மதுரை கல்லூரி மாணவிக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து

ஐ.நா.சபையின் ஜெனிவா கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியிருக்கும் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

சென்னை:

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஐ.நா.சபையின் ஜெனிவா கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியிருக்கும் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரேமலதாவுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூலித்தொழிலாளரின் மகளாகப்பிறந்து, உலக நாட்டுப் பிரதிநிதிகளின் மத்தியில் மனித உரிமை கல்வியின் அவசியம் குறித்து பேசும் அளவிற்கு பிரேமலதா உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com