டி.டி.வி.தினகரன் ஜாமீன் கேட்டு மனு: டெல்லி கோர்ட்டில் நாளை விசாரணை

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் ஜாமீன் கேட்டு டெல்லி மாவட்ட கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
டி.டி.வி.தினகரன் ஜாமீன் கேட்டு மனு: டெல்லி கோர்ட்டில் நாளை விசாரணை
Published on

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இதேபோல  ஹவாலா தரகர் நரேஷ், மல்லிகார்ஜுனா ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். கைதான டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரை சென்னை  கொண்டு வந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர்.

போலீஸ் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 1-ந்தேதி டெல்லி தனிக்கோர்ட்டில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டார். 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதைத் தொடர்ந்து  அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவரது காவல் கடந்த திங்கட்கிழமை முடிவடைந்ததை தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை வருகிற  29-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com