தனியார் ரெயில் சேவை திட்டத்தை கைவிட வேண்டும்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ரெயில் பாதைகளையும், ரெயில்களை இயக்குவதையும் தனியார்வசம் ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

சென்னை:

நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட முக்கியமான நகரங்களுக்கு இடையே தனியார் ரெயில் சேவையை தொடங்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயைத் தனியார்மயமாக்குவதற்கான முன்னெடுப்புகள் அந்தப் போக்குவரத்தை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ஏழை,  நடுத்தர மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளைத் தனியாரிடம் கொடுத்து சிறப்பாக செயல்படுத்துவதில் தவறில்லை. அதேநேரத்தில், ரெயில் பாதைகளையும், ரெயில்களை இயக்குவதையும் தனியார்வசம் ஒப்படைப்பது சரியான முடிவாக இருக்காது. எனவே மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com