தமிழக மக்கள் எங்களைத்தான் ஆட்சியில் அமரவைப்பார்கள்- தினகரன்

எதிர்காலத்தில் தமிழக மக்கள் தங்கள் கட்சியைத்தான் ஆட்சியில் அமர வைப்பார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran
தமிழக மக்கள் எங்களைத்தான் ஆட்சியில் அமரவைப்பார்கள்- தினகரன்
Published on

சென்னை விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினி காந்த் நிரப்புவார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறி இருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.

வருங்காலத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.

எதிர்காலத்தில் தமிழக மக்கள் எங்கள் கட்சியைத்தான் ஆட்சியில் அமர வைப்பார்கள். அதற்கு சான்றாக ஆர்.கே.இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.


காவிரி நதி நீர் பிரச்சனையில் எச்.ராஜா 16-ந்தேதி நல்ல மகிழ்ச்சியான தகவல் வரும் என்று கூறி இருக்கிறார். அதை பொருத்திருந்து பார்ப்போம்.

நதிநீர் இணைப்பு என்பது நல்ல எண்ணம்தான். முதலில் தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்.

காவிரி பிரச்சனை குறித்து நமது அம்மா பத்திரிகையில் மத்திய அரசை எதிர்ப்பது போல் காட்டுகிறார்கள். இது எடப்பாடி பழனிசாமி அரசின் இரட்டை வேட மாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com