சென்னையில் தினகரன் கட்சி அலுவலகம் 3-ந்தேதி திறப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் வருகிற 3-ந்தேதி திறக்கப்பட உள்ளது. #TTVDhinakaran
சென்னையில் தினகரன் கட்சி அலுவலகம் 3-ந்தேதி திறப்பு
Published on

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வை மீட்டெடுக்கின்ற ஒரு அமைப்பாக அரசியல் களத்தில் சுழன்று பணியாற்றிட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சென்னையில் தலைமை கழக அலுவலகம் இயங்கிட அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எண்.10, டாக்டர் நடேசன் சாலை (காவலர் பயிற்சி கல்லூரி அருகில்) அசோக் நகரில் தலைமை கழக அலுவலகம் திறக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க.வின் தலைமை கழகத்தை நாம் மீட்டெடுக்கும் வரை இந்த இடத்தில் நமது தலைமை கழகம் இயங்கும்.

நமது லட்சியங்களை அடைய நாம் பணியாற்ற உள்ள தலைமை கழக அலுவலக திறப்புவிழாவில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com