அ.ம.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் நீக்கம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் இருவரையும் நீக்கம் செய்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாஞ்சில் முருகேசன்  - பச்சைமால்
நாஞ்சில் முருகேசன் - பச்சைமால்
Published on

அம்மா மக்கள் முன்னேற்ற கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பச்சைமால். முன்னாள் அமைச்சரான இவர் கட்சியில் அமைப்பு செயலாளர் பதவியும் வகித்து வந்தார்.

இவர் அ.ம.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். நாளை (5-ந் தேதி) அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைய உள்ளார். இதுதொடர்பாக பச்சைமாலை, அ.ம.மு.க. மூத்த நிர்வாகிகள் தொடர்பு கொண்டு சமாதானம் செய்தனர். ஆனால் பச்சைமால் அதனை ஏற்க மறுத்து அ.தி.மு.க.வில் இணையப் போவதை உறுதி செய்தார். அவருடன் நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனும் அ.தி.மு.க.வில் இணைய உள்ளார்.

இதையடுத்து பச்சைமாலும், நாஞ்சில் முருகேசனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக திடீர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த உத்தரவை அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com