உலக மகளிர் தினம்- தினகரன், ஏசி சண்முகம் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
மகளிர் தினம்
மகளிர் தினம்
Published on

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

“அன்பின் பெரும் உருவமாக, ஆற்றலின் இருப்பிடமாக, உலகை இயக்குகிற உன்னத சக்தியாக திகழும் பெண்மையைப் போற்றுகின்ற இந்நன்னாளில் மாதர் குலத்திற்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள் இல்லாமல் இந்த பூமி சுற்றாது என்ற பேருண்மையை உணர்ந்து செயல்பட மகளிர் தினத்தில் அனைவரும் உறுதியேற்போம். நிறைந்த மனதோடு பெண்களை வாழ்த்திடுவோம்” என்று கூறி உள்ளார்.

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தனது வாழ்த்து செய்தியில், “சர்வதேச மகளிர் தினம்- பெண்கள் நாட்டின் கண்கள், சர்வதேச அளவில் பெண்கள், அனைத்து துறைகளிலும் முதலிடத்தை வகிக்கின்றனர்.

குடியரசு தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர், ராணுவம், நிதித்துறை, வெளியுறவுத்துறை போன்ற பல முக்கிய துறைகளை மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்பவர்கள் பெண்கள். விண்ணிலும் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி உள்ளனர். இத்தகைய பல்வேறு சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு நாம் எல்லோரும் உறுதுணையாய் இருப்போம் என்று “சர்வதேச பெண்கள் தின” நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com