டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்

பாகிஸ்தான் பொய், வஞ்சகம் ஆகியவற்றை தவிர வேறு எதையும் அளித்ததில்லை என தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பொய், வஞ்சகம் ஆகியவற்றை தவிர வேறு எதையும் அளித்ததில்லை என தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது.

ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை என சமீபகாலமாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சில நிதியுதவிகளும் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்களை வாரி வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் முதன்முறையாக டுவிட்டர் பக்கத்தில் 1-1-2018 அன்று டிரம்ப் வெளியிட்ட முதல் பதிவில் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

‘கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களுக்கு மேல் வழங்கியுள்ளது. ஆனால், நமது தலைவர்களை முட்டாள்களாக நினைக்கும் பாகிஸ்தான் பொய், வஞ்சகம் ஆகியவற்றை தவிர நமக்கு வேறு எதையும் அளித்ததில்லை. ஆபகானிஸ்தான் மண்ணில் நாம் வேட்டையாடிவரும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலமும் அளித்து வருகிறது’ என அவர் தெரிவித்திருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக 20 நாட்கள் வரை மவுனமாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி, மேற்படி கருத்தை தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com