லஞ்சப்புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் இடமாற்றம்

லஞ்ச புகாரில் சிக்கி சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்பட 5 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜசேகர்.

இங்கு போலீஸ்காரர்களாக அசோக்குமார், சன்னி லாயிடு உள்ளனர். இவர்கள் மீது லஞ்சப்புகார் எழுந்தது.

வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி வருபவர்களிடம் லஞ்சம் பெற்றதாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் லஞ்ச புகாரில் சிக்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர், போலீஸ்காரர்கள் அசோக் குமார், சன்னிலாயிடு ஆகிய 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜசேகர் வேலூருக்கும், அசோக்குமார், சன்னிலாயிடு திருவண்ணாமலைக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மீதும், பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மீதும் எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com