

மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை சமூக ஆர்வலர் ‘டிராபிக்’ ராமசாமி இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் வியாபார தலமாக மாறிவிட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து அரசு நிர்வாகத்தின் மோசமான முன்னுதாரணமாகும். தமிழகத்தில் உள்ள கோவில்களில் தீயணைப்பு நிலையம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உடனே ஏற்படுத்த வேண்டும். கோவில்களில் சி.சி.டி.வி. காமிரா உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோவில்களில் கடைகள் வைக்க அனுமதிக்கக்கூடாது. நிம்மதியாக பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில்கள் இருக்க வேண்டும். அங்கு ஆடம்பர பொருட்களை விற்பது சட்டவிரோதம்.
தமிழக போலீசார் மீது நம்பிக்கை இல்லை. எனவே கோவில்களில் மத்திய போலீஸ் படையை பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும்.
செல்போன் என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனுக்கு தடை விதித்தது ஏற்கத்தக்க தல்ல. கோவிலில் கட்டண தரிசனத்தை ரத்து செய்து விட்டு இலவச தரிசனத்தை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #trafficramaswamy #MeenakshiAmmantemple