

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
பேச்சை தொடங்கிய வேளாண் அமைச்சர் ரமேஷ், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிக்கிறேன்.
வெற்றி தமிழ்நாட்டை மிளிர செய்வதை நோக்கமாக கொண்டுள்ள மாண்புமிகு முதல்வருக்கும் வெற்றிப் பாதையில் உள்ள முற்களை மலர்களாக்கி காய்களை கனிகளாக்கி முன்னே அழைத்துச் செல்லும் விவசாயிகளுக்கு வணக்கம்.
பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள் (என இருமுறை கூறி) திரைமன்றங்களில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் நாயகன் நீங்கள்தான் (இருமுறை).
உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி ஊழல் ஒவ்வொன்றையும் கலையெடுத்து சமத்துவம் எனும் செடி வளர்த்து மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து நிற்கும் கோட் சூட் அணிந்த விவசாயி நீங்கள்.
விசில் என்பது ஒலி அல்ல, அது பாமரர்களின் மொழி. அதுவும் உலகின் பொது மொழி. விசில், காற்று இசைத்த முதல் ராகம். விசில், மனிதன் பயன்படுத்திய முதல் தொலைபேசி. விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது.
அணியோடு சேரும்போது அகம்பாவம் இருக்காது. ஊரெல்லாம் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. ஒற்றுமையோடு சாதி சமயம் மறந்து நாங்கள் கொண்டாட உங்களை போல் ஒரு வரம் இல்லை.
இனிமேல் தமிழ்நாட்டின் தலைப்பு செய்தி ஒன்று நீங்கள் பேசுவதாக இருக்கும். இல்லை நீங்கள் பேசப்படுவதால் இருக்கும். ஆழிப்பேரலையாய் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெருங்கடலை....
என பேசிக்கொண்டிருக்க எதிர்கட்சிகள், வேளாண் படஜெட்டை தாக்கல் செய்யாமல் சொந்த கட்சி மற்றும் தலைவர் துதி பாடுவதாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எம்எல்ஏக்கள் கூச்சல் எழுப்பினர்.
அவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து அவர்களை அமைதியுடன் இருக்க வலியுறுத்திய சபாநாயகர் பிரபாகர், வேளாண் பட்ஜெட்டை மட்டும் வாசிக்கும்படி அமைச்சருக்கு அறிவுறுத்தினார். அதான் நானே சொல்லிட்டேனே, அமைதியா இருங்க என எதிர்கட்சியினரை இருக்கைகளில் அமர சொல்லி பிரபாகர் வலியுறுத்தினார்.