வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம் -அமைச்சர் வினோத்

செயற்கை நுண்ணறிவின் (AI) வருகையால் 2021-ம் ஆண்டு முதல் விவசாயத் துறை புதிய பரிணாமத்தையும் வளர்ச்சியையும் பெற்றுள்ளது.
minister vinoth
Published on

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு..

வெற்றி தமிழ்நாடு இலக்கு:

"வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது அரசின் முதன்மை இலக்கு" என அமைச்சர் வினோத் தனது உரையில் குறிப்பிட்டார்.

தனி பட்ஜெட் நடைமுறை:

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

நவீன தொழில்நுட்பம் & AI

செயற்கை நுண்ணறிவின் (AI) வருகையால் 2021-ம் ஆண்டு முதல் விவசாயத் துறை புதிய பரிணாமத்தையும் வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

பாதுகாப்பு & உறுதிப்பாடு:

தமிழகத்தில் வேளாண்மையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முழு உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com