Roar at Chepauk... ரஹ்மான் இசை நிகழ்ச்சி... முன்னாள் வீரர்களுடன் CSK வீரர்கள் மோதல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Roar at Chepauk... ரஹ்மான் இசை நிகழ்ச்சி... முன்னாள் வீரர்களுடன் CSK வீரர்கள் மோதல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Published on
Summary

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது ரசிகர்களுக்காக 'Roar at Chepauk' என்ற பிரம்மாண்ட கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியை மார்ச் 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த உள்ளது.

சென்னை:

ஐபிஎல் 2026 சீசன் வருகிற மார்ச் 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது ரசிகர்களுக்காக 'Roar at Chepauk' என்ற பிரம்மாண்ட கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியை மார்ச் 22-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த உள்ளது.

சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய் மற்றும் எஸ். பத்ரிநாத் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இந்த விழாவில் ஒரு சிறப்பு நேரடி இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளார்.

மேலும் தற்போதைய சிஎஸ்கே வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் இடையே சில சுவாரஸ்யமான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சவால்கள் இந்த விழாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவிற்கான டிக்கெட் விற்பனை மார்ச் 15, 2026 (நாளை) காலை 11:00 மணிக்கு தொடங்குகிறது. ரசிகர்கள் சிஎஸ்கே-வின் அதிகாரப்பூர்வ இணையதளம் (chennaisuperkings.com), அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் அல்லது District.in தளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com