விலை உயர்வு- தக்காளி பறிப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

வடமதுரை பகுதியில் விலை உயர்ந்துள்ளதால் தக்காளி பறிப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விலை உயர்வு- தக்காளி பறிப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
Published on

வடமதுரை:

திண்டுக்கல் அருகே வடமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான மோர்பட்டி, புத்தூர், பாகாநத்தம் ஆகிய பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது.

இங்கிருந்து சென்னை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கிலோ ரூ.1-க்கும் கீழே சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் பலர் செடிகளிலேயே தக்காளிகளை பறிக்காமல் விட்டு சென்றனர்.

தற்போது வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை ஓரளவு உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80 வரை விலை கேட்கப்படுவதால் தக்காளி பறிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோடை காலம் தொடங்கி உள்ளது. எனவே வரும்காலங்களில் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமுடன் பணிகளை தொடங்கி உள்ளனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com