திருச்சியில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம்

திருச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா கீழே விழுந்து பலியான சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம்
Published on

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் வாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா கீழே விழுந்து உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

மனித நேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக் கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:

வசூலிப்பதையும், ஊழல் செய்வதையுமே குறிக்கோளாக வைக்காமல், மக்களுக்கு சேவைசெய்யும் காவல்துறையாக இருக்க வேண்டும்.

உயிரிழந்த அப்பாவி கர்ப்பிணி பெண் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி வழங்கவேண்டும்.

ராஜபாளையத்தில் இன்று காலை டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

திருச்சியில் கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமாக போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் காவல் துறை மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். போலீசார், பொதுமக்களிடம் தவறாக நடந்து வருகிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது நேரடி கட்டுப்பாட்டில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியில் காவல் துறையை கூட ஒழுங்காக வைத்திருக்க முடியவில்லை.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

உலகமே மகளிர் நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், திருச்சி தூவாக்குடி சாலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு காவல் துறையால் பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது.

காவல் துறையினர் நடந்து கொண்ட விதம் மனித நாகரீகத்துக்கு சற்றும் ஒவ்வாதது ஆகும். காவல்துறையில் மனித நேயம் கொண்டவர்கள் பெருமளவில் இருக்கும் போதிலும், இன்ஸ்பெக்டர் காமராஜ் போன்ற மனநிலை கொண்டவர்களால் தான் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. காமராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:

காவல் துறையினர் தங்களது அலட்சியப் போக்கையும், அதிகாரத்தை மீறும் போக்கையும், மெத்தனப் போக்கையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து அந்த காவல் துறை ஆய்வாளரை பணி நீக்கம் செய்வதோடு, உரிய தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும்.

உஷா குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்க முன்வர வேண்டும். மேலும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

இன்ஸ்பெக்டர் வாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா கீழே விழுந்து பலியாகி உள்ளார். காவல்துறை அதிகாரி காமராஜை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அவரை பாதுகாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டாம்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com