5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் - உள்துறை செயலாளர் உத்தரவு

தமிழக காவல்துறையில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் - உள்துறை செயலாளர் உத்தரவு
Published on

சென்னை:

தமிழக காவல்துறையில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விபரங்கள் பின்வருமாறு:-

சென்னை குற்றப்பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் அமரேஷ் புஜாரி, சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் ஜெயந்த் முரளி, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் மஞ்சுநாதா, தொழில்நுட்ப சேவை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப சேவை கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் அபாஷ் குமார், குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டுப்பாட்டு அறை இணை கமிஷ்னராக இருக்கும் விஜயகுமாரி பதவி உயர்வு பெற்று சென்னை மேற்கு மண்டல டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com