நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்கும் சந்தானம் குழுவுக்கு மேலும் 2 வாரம் அவகாசம்

மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த புகாரில் கைதாகியுள்ள நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க ஆளுநர் நியமித்த சந்தானம் குழுவுக்கு மேலும் 2 வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. #NirmalaDevi
நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்கும் சந்தானம் குழுவுக்கு மேலும் 2 வாரம் அவகாசம்
Published on

அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.

நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, மதுரை பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி படிப்பு மாணவர் கருப்பசாமி அவரது நண்பர் தங்க பாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இவ்விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com