ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரனம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
Published on

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை ஆணையம் தீபா, அரசு மருத்துவர் பாலாஜி என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி, ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும் புகார் கூற நினைப்பவர்கள் விசாரணை ஆணையத்தில் கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய பணிகள் முடிக்கப்படாமல் உள்ள நிலையில், டிசம்பர் 25-ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. 

எனவே, ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசின் பொதுத்துறை செயலருக்கு கடிதம் எழுதியயிருந்தார். இந்நிலையில், அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு பதவிக்காலத்தை மேலும்  6 மாதங்கள் நீட்டிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com