தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்
Published on

சென்னை:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். 

மேலும், அவர்களின் 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள 50 மீனவர்கள், 143 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com