குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.10.17 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த காட்சி.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த காட்சி.
Published on

ஊத்துக்கோட்டை:

குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30 ஏரிகளை தூர்வார தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

இதில் ஊத்துக்கோட்டை தாலுக்காவில் 10 ஏரிகள் அடங்கும்.

ஊத்துக்கோட்டையை அடுத்த பனப்பாக்கம் ஏரியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் ஜனபன்சத்திரம் அருகே உள்ள மஞ்சாங்காரணை அடுத்த கூரம்பாக்கம் குளத்தை தூர்வாரும் பணியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com