மாற்றுத்திறனாளிகள் தினம்- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சர்வதே மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

சர்வதே மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பேணிக் காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தில் அனைத்து உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது.

குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அந்தக் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்; பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள்.

மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்; கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல்; மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை.

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500 மாதாந்திர உதவித் தொகை வழங்குதல், இந்தியாவிலேயே முதன்முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரப் பணிக்கு முழு நாள் ஊதியம் ஆகியவற்றை வழங்குகிறது.

மேலும் பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருகிறது.

இந்த இனிய நாளில், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுதந்திரமாக வாழ்வதற்கு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும்.

இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com