கோவா முதல்-மந்திரி மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #ManoharParrikar #EdappadiPalaniswami
கோவா முதல்-மந்திரி மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Published on

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சரும், சிறந்த அரசியல் தலைவருமான மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவால் புதுடெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவு கோவா மாநிலத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com