தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் நடக்கிறது

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. #TNAssembly #CauveryIssue
தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் நடக்கிறது
Published on

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததும் சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

எனவே இன்று பிற்பகல் நடைபெறும் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com