சிகிச்சை முடிந்து சபாநாயகர் ப.தனபால் வீடு திரும்பினார்

உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் வீடு திரும்பினார்.
சிகிச்சை முடிந்து சபாநாயகர் ப.தனபால் வீடு திரும்பினார்
Published on

சென்னை:

தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபாலுக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவருக்கு செரிமானக்கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சென்று பார்த்தனர்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் வீடு திரும்ப டாக்டர்கள் அனுமதி அளித்தனர். நேற்று மதியம் சபாநாயகர் தனபால் வீடு திரும்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com