அரசு விழா அழைப்பிதழில் தொகுதி எம்.எல்.ஏ. பெயர் இனி இடம்பெறும்: சபாநாயகர் உறுதி

அரசு சார்பில் நடத்தப்படும் விழாக்களில் அந்த தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பெயர் இனி இடம்பெறும் என்று சபாநாயகர் உறுதி அளித்துள்ளார்.
அரசு விழா அழைப்பிதழில் தொகுதி எம்.எல்.ஏ. பெயர் இனி இடம்பெறும்: சபாநாயகர் உறுதி
Published on

சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் இன்று சட்டசபையில் பேசும் போது, “அரசு சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு அந்த தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை அழைக்காமல் வேறு தொகுதி எம்.எல்.ஏ.க்களை அழைத்து மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி போன்றவற்றை நடத்துகிறார்கள்.

சமீபத்தில் பொன்னேரியில் நடந்த மடிக்கணினி வழங்கும் விழாவில் திருவள்ளூரை சேர்ந்த எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் பொன்னேரி எம்.எல்.ஏ.வை அழைக்கவில்லை. அவரது பெயரும் அழைப்பிதழில் இடம் பெறவில்லை.

சபாநாயகர்:- இனி இது போன்று நடக்காது. அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தும்படி தலைமை செயலகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com