திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கொலை- 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூரில் கட்டிட மேஸ்திரியை கொலை செய்த 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமி‌ஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கொலை- 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருப்பூர்:

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவர் வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி ஆரோக்கியசாமியை வழிமறித்து அறிவழகன் உள்ளிட்ட சிலர் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலையில் தொடர்புடைய அறிவழகன், ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் சண்முகம், ராஜேந்திரன், சித்திரவேல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ராஜேந்திரன் மற்றும் சண்முகத்தையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சித்திரை வேலுவை தேடி வருகின்றனர், இந்தகொலை வழக்கில் தொடர்புடைய அறிவழகன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் கமி‌ஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து 2 பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து அதற்கான நகலை கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளிடம் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com