வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு - தங்க தேரோட்டம் நடந்தது

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். #vaikuntaekadasi #sorgavasal
திருப்பதியில் இன்று தங்க தேரோட்டம் நடந்த காட்சி.
திருப்பதியில் இன்று தங்க தேரோட்டம் நடந்த காட்சி.
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 12.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் வைகுந்த வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோ‌ஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 3 மணியில் இருந்து 3.30 மணி வரை சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை நிகழ்ச்சி நடந்தது.

காலை தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி தங்க தேரில் மாடவீதிகளில் வந்து அருள்பாலித்தார்.

ஏழுமலையானை தரிசனம் செய்ய 2 லட்சம் பேர் திருப்பதிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு 2 லட்சம் அன்ன பிரசாதம், 4 லட்சம் வாட்டர் பாக்கெட், 2 லட்சம் மோர் பாக்கெட் மற்றும் பால் வழங்கப்பட்டது.

நாளை காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவிலில் உள்ள தங்கக் கொடி மரம், பலி பீடம், ரெங்கநாயக்கர் மண்டபம், வெள்ளிக்கதவுகள், சொர்க்க வாசல், வகுளமாதாதேவி சன்னதி, யோக நரசிம்மசாமி சன்னதி, வரதராஜசாமி சன்னதி ஆகியவை உள்பட பல்வேறு இடங்களில் 6 டன் மலர்களாலும், பல்வேறு பழங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோவிலுக்கு வெளியே ராஜகோபுரம், நான்கு மாடவீதிகள், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர திருமலையில் உள்ள ஜி.என்.சி.டோல் கேட்டில் இருந்து கோவிலின் பிரதான நுழைவு வாயில் வரை 5 டன் மலர்களால் சிறப்பு அலங்கார வளைவுகள், தோரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டது.

மொத்தம் 11 டன் மலர்களால் கோவில் மற்றும் திருமலை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #vaikuntaekadasi #sorgavasal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com