திருமங்கலத்தில் 17 பவுன் நகை மாயம்

திருமங்கலத்தில் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை மாயம்
நகை மாயம்
Published on

மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம் பொற்கை நகரைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சுப்புலட்சுமி. சம்பவத்தன்று முத்தையாவும், அவரது மகளும் வேலைக்கு சென்று விட்டனர்.

சுப்புலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் முத்து ஷீலா என்பவர் வீட்டு சாவி மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை சுப்பு லட்சுமியிடம் கொடுத்து குழந்தையிடம் ஒப்படைக்கும்படி கூறியதாக தெரிகிறது. அதனை தனது மகள் தங்கும் அறையில் சுப்பு லட்சுமி வைத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அங்குள்ள பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை மாயமானது.

இது குறித்து சுப்புலட்சுமி திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com