துவாக்குடி அருகே கார் மோதி தொழிலாளி பலி

துவாக்குடி அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவாக்குடி அருகே கார் மோதி தொழிலாளி பலி
Published on

திருவெறும்பூர்:

திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை கனகவேல் அவென்யூவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 45). தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிசீயனாக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை வேலைக்காக திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

துவாக்குடி டோல்கேட் அருகே உள்ள தேவராயநேரி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாஸ்கர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப் பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் துவாக்குடி போலீசார் விரைந்து சென்று பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com