கென்யா ஜனாதிபதி தேர்தலில் தோல்வி எதிரொலி: எதிர்க்கட்சியினர் வன்முறை - போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

கென்யாவில் ஜனாதிபதி தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக எதிர்க்கட்சியினர் நடத்திய வன்முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கென்யா ஜனாதிபதி தேர்தலில் தோல்வி எதிரொலி: எதிர்க்கட்சியினர் வன்முறை - போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
Published on

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சமீபத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி பதவிக்கு 8 பேர் போட்டியிட்டனர். எனினும், முன்னாள் ஜனாதிபதியான உஹூரு கென்யாட்டா (55), முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா(72) ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவியது. வன்முறை ஏற்படலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

ஆனால், தேர்தல் ஆணைய கம்ப்யூட்டர்கள் மற்றும் அதில் உள்ள தரவுகளை ஹேக்கர்கள் முடக்கிவிட்டதாகவும், இது மிகப்பெரிய வாக்கு மோசடிக்கு வழிவகுத்திருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா குற்றம்சாட்டினார்.

இதனால், அவரது ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொண்டர்களை அமைதி காக்கும்படி ஒடிங்கா கேட்டுக்கொண்டார். அதேசமயம், மக்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறி ஆதரவாளர்களை உசுப்பேற்றி விட்டார். இதையடுத்து ஒடிங்காவின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கினர்.

வாக்கு எண்ணிக்கை துவக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்த ஜனாதிபதி கென்யாட்டா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். இதனால் ஒடிங்காவின் ஆதரவாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

ஒடிங்காவின் கோட்டையாக கருதப்படும் கிசுமு நகரில் தொடர்ந்து சில நாட்களாக ஏராளமானோர் திரண்டு கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘ஒடிங்கா இல்லையென்றால் நாட்டில் அமைதி இல்லை’ என்று முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் போலீசார் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். எனவே, அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது. இதேபோல் நைரோபி நாட்டில் உள்ள குடிசைப் பகுதிகளிலும் ஒடிங்காவின் ஆதராவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com