துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நடந்த என்கவுண்டரில் ஏராளமான ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாநில அரசின் இந்த செயலுக்கு எதிர் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மாநில மக்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால், சிலர் இந்த சமுதாயத்தை துப்பாக்கியால் அமைதிக்கு பங்கம் விளைவித்து வருகின்றனர். துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும்.

இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சட்டசபையில் எதிர் கட்சிகள் நடந்து கொள்ளும் விதம் வருத்தம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com