தொப்பூரில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து

தொப்பூரில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து காயம்
விபத்து காயம்
Published on

நல்லம்பள்ளி:

தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் ஏற்றிய ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது 50) என்பவர் ஓட்டினார். தொப்பூர் கணவாயில் இந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பு சுவரில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் மாரியப்பன் படுகாயமடைந்தார். லாரியில் இருந்த செங்கல் அந்த பகுதியில் சரிந்து விழுந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com