தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வாலிபர் படுகொலை - தி.மு.க. நிர்வாகி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் பயங்கரம் வாலிபர் படுகொலை; 2 பேருக்கு கத்திக்குத்து தி.மு.க. நிர்வாகி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
கொலை செய்யப்பட்ட செல்வம்
கொலை செய்யப்பட்ட செல்வம்
Published on

தூத்துக்குடி, ஜன. 28-

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள மாதாநகர் 5-வது தெருவை சேர்ந் தவர் ராஜ். இவரது மகன் செல்வம்(வயது 20). ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த செல்லப்பா மகன் முத்துக்குமார்(36), முருகன் மகன் முத்துச்செல்வம் (33).

செல்வம், முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர். அவர்களுக்கும், தூத்துக்குடி மாதாநகர் பொய்யாமொழி மகன் பார் ரவி என்பவருக்கும் கோவில் நிர்வாகம் தொடர் பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக இவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு நண்பர்கள் செல்வம், முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகிய 3 பேரும் மாதாநகர் சந்தன மாரியம்மன் கோவில் அருகே நின்று பேசிக் கொண்டிருந் தனர். அப்போது அங்கு பார் ரவி தனது நண்பர்களுடன் வந்தார்.

முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பார் ரவி, பார்த்தசாரதி, கனகராஜ், இசக்கிமுத்துஆகிய 4பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வத்தை சரமாரியாக குத்தினர்.

அவர்களை தடுத்த செல்வத்தின் நண்பர்கள் முத்துக்குமார், முத்துச் செல்வம் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பலியா னார். இதையடுத்து பார் ரவி உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் தாள முத்து நகர் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து படுகாய மடைந்து கிடந்த முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகியோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொலை செய்யப் பட்ட செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். தப்பியோடிய பார் ரவி மாதாநகர் தி.மு.க. வார்டு செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. * * * தஞ்சை-3 * * * நாகை அவுரிதிடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். * * * தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை படத்தில் காணலாம். * * * கொலை செய்யப்பட்ட செல்வம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com