தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயற்குழு கூட்டம் புதுக்கோட்டை மங்களகிரியில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடந்தது.
மதிமுக
மதிமுக
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயற்குழு கூட்டம் புதுக்கோட்டை மங்களகிரியில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் குருமத்தேயு ஜெபசிங் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் செல்வம் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லசாமி, மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன்,  அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கல்லத்தியான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் ம.தி.மு.க தலைவர் வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  

அடுத்த மாதம் 15-ந்தேதி சென்னை நந்தனத்தில் நடக்க உள்ள அண்ணா பிறந்த நாள் விழாவில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராள மானோர் கலந்து கொள்வது, தேர்தல் நிதி வசூலித்தல், உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாழ்நாள் உறுப்பினர் சேர்க்கை ஆகியவற்றை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட வைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. 

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் சங்கரன், துணை தலைவர்கள் ஆறுமுகம், முருகன், மகா ராஜன், இளைஞரணி செயலாளர் கண்ணன், விவசாய அணி செயலாளர் பெருமாள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் செல்வம் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com