திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை

திருவள்ளூர் மாவட்டத் தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத் தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னேரி யில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பழவேற்காடு கடற் கரையையொட்டி சுமார் 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 15 நாட்களாக அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல்சீற்றம் இன்றும் குறையவில்லை. நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

படகுகளை அவர்கள் கடற்கரை ஓரத்தில் கட்டி வைத்துள்ளனர். பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் மீன் வரத்து இல்லாததால் மழையினால் நிரம்பிய ஏரி குளம் ஆறுகளில் அதிகமானோர் மீன் பிடித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பொன்னேரி- 70 , கும்மிடிப்பூண்டி- 62, தாமரைப்பாக்கம் -36, சோழவரம் - 33, செங்குன்றம்-29, அம்பத்தூர்-21, திருவள்ளூர் -16 , செம்பரம்பாக்கம்-15.20, பூண்டி -12, திருவாலங்காடு- 11, பூந்தமல்லி -5.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com