

மதுரை:
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சசிக்குமார் (வயது 38). கட்டிடத் தொழிலாளி.
இவர் அந்த பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தபோது இரும்புக் கம்பியை தூக்கினார். எதிர்பாராத விதமாக அந்த கம்பி மின் வயரில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து சசிக்குமார் தூக்கி வீசப்பட்டார்.
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சசிக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஜனனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.