கொரோனா இல்லாத பசுமை மண்டலமாக திருக்கோவிலூர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அறிவித்த நாள் முதல் இதுநாள்வரை கொரோனா தொற்று இல்லாத பசுமை மண்டலமாக திருக்கோவிலூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

திருக்கோவிலூர்:

கொரோனா வைரஸ் தொற்று அறிவித்த நாள் முதல் இதுநாள்வரை கொரோனா தொற்று இல்லாத பகுதியாக திருக்கோவிலூர் இருந்து வருகிறது. இதனால் மாவட்டத்திலேயே திருக்கோவிலூர் பசுமை மண்டலமாக உள்ளது.

இதனை சிறப்பிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் பணி புரியும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் நடை பெற்றது.

துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் போலீசாருக்கு நிவாரண உதவிகள் வழங்கி பசுமை மண்டலமாக திருக்கோவிலூர் பகுதி இருக்க அரும்பாடு பட்டமைக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com