திருபுவனை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

திருபுவனை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி இறந்து போனார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

திருபுவனை:

திருபுவனை அருகே மதகடிப்பட்டு புதுக்காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இன்று அதிகாலை ராதாகிருஷ்ணன் வயல்வெளிக்கு செல்ல அங்குள்ள மெயின்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராதாகிருஷ்ணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கிவீசப்பட்ட ராதாகிருஷ்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து ராதாகிருஷ்ணன் மீது மோதிவிட்டு சென்ற வாகனத்தை தேடிவருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com